Showing posts with label Relationship. Show all posts
Showing posts with label Relationship. Show all posts

Saturday, 16 August 2014

கல்யாண்த்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க?

 "ஒரு பயிர நட்டு அறுவடை முடிய அதிகபட்சம் ஆறு மாசங்காலம் ஆகும்.அதனால் எல்லா பயிருக்கும் அதிகப்ட்சம் ஆயுசு ஆறு மாசந்தான். ஆனா கல்யாணம் நீண்ட கால உறவு.
அது ஆயிரம் வருஷம் நீடிக்கக்கூடிய உறவுங்கிறதால அதை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க.

உங்கள் துணையை மனதில் இருந்து காதல் செய்யுங்கள் .





காதலிக்கவோ,திருமணம் செய்யவோ சரியான நபரை கண்டு பிடிப்பது  சுலபம்தான் .ஆனால்,வாழ்நாள் முழுவதும் அந்த நபருடன் ,அதே காதலுடன் வாழ கற்று கொள்வதுதான் கஷ்டம் .அந்த வித வித்தை உங்களுக்கு கைவர .


துணையை மாற்ற  முயற்ச்சிக்காமல் அவரை அப்பிடியே  ஏற்றுக் கொள்வதும் காதலிப்பதும் மட்டுமே போதுமானது.


உங்கள்  துணையை உங்களது நெருங்கிய நண்பர்கள் போல நடத்துங்கள் .நல்ல நட்பிடம் பகிர்ந்து கொள்ளகூடிய அனைத்தும் உங்கள் துணையுடன்  பகிர்ந்து கொள்ளுங்கள் .


இதை போய் எப்படி சொல்றது என  தயங்காமல் உங்கள் எண்ணங்கள்,ஆசைகள்,கனவுகள்,போராட்டங்கள் என அனைத்தும் துணையுடன் பகிருங்கள்.

உங்கள் துணையை எக்காரணம் கொண்டும் யாருடனும் ஒப்பிட்டாதீர்கள்.அது உங்கள் மீதும் அவர்கள் மீதும் வெருப்பை உண்டாகும்.

ஏதோ ஒரு காரணத்தால் தான் உங்கள் துணையை  ஏற்றுக்கொண்டு இருப்பிர்கள்.அதை நினைத்து சந்தோஷமாக  இருங்கள்.

சின்ன சின்ன விஷயங்களை மனதில் நினைத்து உங்கள்   உறவை கெடுத்து கொள்ளாதிர்கள்.


நம வாழ்க்கை நாம் பார்த்துகொள்வோம்  ஏன் அனுசரித்து போக வேண்டும் என நினைக்காமல் நம் பெரியோர்கள் சொல்வது போல கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்பதை மனதில் வைத்து உங்கள் துணையை மனதில் இருந்து காதல் செய்யுங்கள் .



உங்கள் திருமண  வாழ்க்கை  வெற்றியோடு இருக்கும்.

Sunday, 15 June 2014

தந்தையர் தின வாழ்த்துக்கள்





நாம் அழுகிற போது தானும் கலங்குவார்
நாம் சிரிக்குற போது தானும் சிரிப்பர்
நாம்  தப்பு செய்யும் போது  கண்டிபார்
நமக்காக அனைத்தையும் இழந்து
நம் மகிழ்ச்சிக்காக பாடு படுவார்
நமக்காகவே நம்  வாழ்க்கைக்காகவே
உழைப்பவர் அப்பா