Wednesday, 6 August 2014

தினமும் தலைக்கு குளிப்பது கூந்தலுக்கு நல்லதா?



ஷாம்புக்களில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால் அவை தலைமுடிகளிலும் மயிர்க் கால்களிலும் உள்ள தேவையான எண்ணெய்களை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்துவிடும். இது கூந்தலுக்கு நல்லதல்ல. எனவே வாரத்திற்கு 3 முறை தலைமுடியைக் கழுவினால் போதும். அதிலும் சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது.


• எண்ணெய்த் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்குப் பின் சூடான டவல் கொண்டு சுற்றிக் கொண்டு, பின்னர் முடியைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், இஞ்சிச் சாற்றை உச்சந்தலையில் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முடியைக் அலசுவதும் நல்லது. மேலும் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு தேய்த்து 2 நாட்களுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவுதல் நலம். 


• தலைமுடிக்கு ஹென்னாவை உபயோகிப்பதால், அது வறண்டு தான் அதற்குப் பதில் தரமான கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது சிறந்தது. 


• தலைமுடிகளை மிருதுவாக்க ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. ஓரிரண்டு துளிகளை மட்டுமே எடுத்து முடிகளில் சீராகத் தடவினாலே போதும். 


• ஹேர் ஸ்பா செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், இயற்கை வழிகளையே நாடுங்கள். செம்பருத்திப் பூவை நன்றாக அரைத்து முடிகளில் தடவுவது நல்லது. அது முடியை நன்கு கருமையாகவும், வலுவாகவும் வளரச் செய்யும். 


மேலும் இரும்புச்சத்து அதிகமுள்ள மருதாணி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்த வேம்பு ஆகியவையும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதே போல் முடி அலர்ஜிக்கு கற்றாழை மிகவும் நல்லது. முடிகளில் கலர் செய்திருப்பவர்கள், வெண்ணெயை உபயோகிக்கலாம்.

பெண் (படித்ததில் பிடித்தது)

                                                 பெண்


ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ,
பரிசுப் பொருட்களையோ அல்ல.

அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்

உங்களுடைய நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்
என்பதைத்தான்.! 


ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !


இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !



இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !



இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !



இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !



இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

Tuesday, 5 August 2014

DRINK WATER ON EMPTY STOMACH

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT 

1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute

3.. After 45 minutes you may eat and drink as normal.

4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:
1. High Blood Pressure (30 days)
2. Gastric (10 days)
3. Diabetes (30 days)
4. Constipation (10 days)
5. Cancer (180 days)
6. TB (90 days)
7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily..

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times. 
It is better if we continue this and make this procedure as a routine work in our life. 

Drink Water and Stay healthy and Active.          

Friday, 1 August 2014

உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்டு 1

தாய்ப்பால் என்பது அரிய உணவு. அதிசய உணவு. தாய்ப்பாலை போதுமான அளவுக்கு குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, அறிவாற்றலிலும் உச்சத்தை தொடுவார்கள். எனவே தான் தாய்ப்பாலை தானத்தை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டே பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த (ஆகஸ்டு 
1-ந் தேதி) முதல் ஒரு வாரத்துக்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.

மேலைநாடுகளில் பெண்கள் தங்கள் மார்பக அழகு போய்விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டு பிடித்துள்ளனர்

கொலஸ்ட்ரம்' எனும் பால் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொண்டது. தாய்ப்பாலுக்கு இணையாக எந்த செயற்கை முறையிலும் ஈடு செய்து தயாரிக்க முடியவில்லை என்பதே தாய்ப்பாலின் சிறப்பு. 

தாய்ப்பால் குழந்தைக்கு,
  • ஒரு முழு உணவு 
  • எளிதில் ஜீரணம் ஆகும் 
  • குழந்தை தாடை வலுப்படும் 
  • குடல், வயிறு வலி இருக்காது 
  • சர்க்கரை நோய் பாதிப்பு குறையும் 
  • அபார நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் 
  • குண்டாக உடல் உருவாவதைத் தடுக்கும் 
  • குழந்தையின் கவனிக்கும் திறன் கூடும். 
  • நல்ல மனநலம் உருவாகும்


தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெறும் நீண்ட கால பலன்கள் 
  • அலர்ஜி இவர்களை அதிகம் தாக்குவதில்லை 
  • மார்பக புற்றுநோய் வாய்ப்பு மிகவும் குறைவு 
  • இருதய நோய் பாதிப்பு குறைவு 
  • புத்தி கூர்மை இருக்கும். 
தாய்ப்பால் கொடுக்கும் தாய் பெறும் பயன்கள் 
  • கர்ப்பபை நன்கு சுருங்கும் 
  • மார்பக புற்று நோய் அபாயம் குறைவு. 
  • மனச்சோர்வு, மன உளைச்சல் இருக்காது. 
  • எலும்புகளின் தேய்மானம் நன்கு கட்டுப்படும். 
  • தாய், சேய் புனித உறவு மேம்படும். 
  • செலவு இல்லை. 
  • நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

Saturday, 26 July 2014

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும்
வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர்
நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்..

மனைவி அமைவதெல்லாம்...!




(முழுவதும் படிக்கவும்)

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?

எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..


Monday, 21 July 2014

BENIFITS OF WALKING


Health benefits of Cashew nuts



 Benefits of cashew nuts to improve memory

Prevent artery disease-related

slow the formation of blood clots and reduce the clogging of arteries.

Soluble fiber in cashew nuts is quite useful for promoting heart health. It helps to reduce the cholesterol levels in the blood stream.

Cashew’s has high copper content is vital in energy production, greater flexibility in blood vessels, bones and joints.

Lowers the risk of cancer