Showing posts with label my own lines. Show all posts
Showing posts with label my own lines. Show all posts

Tuesday, 16 September 2014

LIFE

one day happy another day sad that is life .....every sad moment teach me  A lesson in my life....every happy moment teach me how to live a life..


வாழ்க்கை இனிது

                                                வாழ்க்கை இனிது 


நமக்கு  பிடித்த வாழ்க்கை அமைந்தால்  வாழ்க்கை இனிது 


நமக்கு பிடித்த தோழிகள் அமைந்தால் வாழ்க்கை இனிது 


நம்மை போலவே ஒரே எண்ணம் உள்ள வாழ்க்கை 
துணை கிடைத்தால் வாழ்க்கை இனிது

 முதல் நாள் சண்டையை அடுத்த நாள் மறந்து பேசும் 
துணை கிடைத்தால் வாழ்க்கை இனிது 

 அழும் போது கண்ணீரை துடைக்க 
ஒரு தோழன் இருந்தால் வாழ்க்கை இனிது.

ஏதும் இல்லை என்றாலும் இருப்பதை வைத்து 
வாழ கற்று கொண்டால் வாழ்க்கை இனிது 

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை 
இருக்கும் வாழ்க்கையை சந்தோசமாக 
வாழ்ந்தால் வாழ்க்கை இனிது.



Monday, 25 August 2014

வாழ்க்கை மிக கடினம்




பிறந்த உடன்  என்ன குழந்தை 

ஆனா  பெண்ணா ?

வளர்ந்த உடன் என்ன படிக்குற ?

படிச்சு முடிக்கும் போது எப்ப 

வேலைக்கு போவ ?

வேலைக்கு போன உடன் 

எப்ப கல்யாணம் ?

கல்யாணம் ஆன உடன் 

குழந்தை  எப்ப?

இன்னும் இல்லையா ?

டாக்டர் ட போனியா ?இல்லையா ?

இருந்தா என்ன படிக்கவைக்க போற ?

இது தான் சமூகம் அவர்கள் கேள்வி 

மட்டும் தான் கேப்பார்கள் 

அவர்களுக்காக நாம் வாழாமல் 

நமக்காக வாழ  வேண்டும்